கலக்கப்போவது யாரு புகழ் பாலா நடித்தும், இயக்குநர் ஷெரிஃப் இயக்கிய ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், முதல் நாளிலேயே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, பாலாவின் நடிப்பும், கதையின் வித்தியாசமான அணுகுமுறையும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஆனால், இப்படத்திற்கு தியேட்டர்களில் போதுமான ஷோக்கள் வழங்கப்படவில்லை என்றும், பட பேனர்கள் வைக்கப்படுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இயக்குநர் ஷெரிஃப் அதிருப்தி தெரிவித்துள்ளார். சிறிய படங்களுக்கு திரையிடும் வாய்ப்பு குறைக்கப்படுவது அநியாயம் என அவர் வலியுறுத்தியுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தியேட்டர் நெருக்கடி காரணமாக படத்தின் வெற்றிக்கு சவால் உருவாகியுள்ளது.