தெலுங்கில் வெளியாகிய அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பூஜாஹெக்டே, அதில் புட்டபொம்மா என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். எனினும் நடப்பு ஆண்டு பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த திரைப் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பூஜா ஹெக்டே சல்மான் கானுடன் டேட்டிங் செல்வதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இது குறித்த வதந்திகளுக்கு நடிகை பூஜா ஹெக்டே பதிலளித்துள்ளார். அதாவது என்னைப் பற்றி அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நான் சிங்கிளாக தான் இருக்கிறேன். அதுதான் எனக்கு பிடிக்கும். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். என் மீதான வதந்திகளுக்கு பதிலளிக்க எனக்கு நேரமில்லை என்றார். சல்மான், பூஜா நடித்துள்ள ‘கிசி கா பாய்.. கிசி கி ஜான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.
