நடுத்தர குடும்ப வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகர் சித்தார்த்தின் சமீபத்திய படம் 3பிஎச்கே, திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும், பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வசூலையும் பெற்றுள்ளது.
சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். உணர்ச்சி மிகுந்த குடும்பப் பின்னணியில் உருவான இந்த திரைப்படம், பலரின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பார்வையிட்டதும், படத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சச்சின், “எனக்கு நேரம் கிடைக்கும் போது சில திரைப்படங்களை பார்ப்பேன். சமீபத்தில் 3பிஎச்கே மற்றும் அட்டா தம்பாய்ச்சா நாய் ஆகிய இரு படங்களையும் பார்த்து ரசித்தேன்,” என தெரிவித்தார்.
இதற்கான பதிலாக, நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில், “அன்புள்ள சச்சின் ஜி, எங்கள் தமிழ் திரைப்படமான 3பிஎச்கே படத்தை பாராட்டியதற்கு நன்றி. இந்த அங்கீகாரம் எங்கள் குழுவை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது,” என நன்றி தெரிவித்துள்ளார்.
Dear Sachinji thank you for appreciating our tamil film 3bhk @sachin_rt , the entire team of 3bhk are delighted and happy for the recognition @iamarunviswa @sri_sriganesh89 @Chaithra_Achar_ .
— R Sarath Kumar (@realsarathkumar) August 26, 2025
“>
