நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தால் தனது வாழ்க்கையே மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 27 ஆண்டுகள் சேமித்த பணத்தை முழுவதுமாக முதலீடு செய்து புலி படத்தை உருவாக்கியதாகவும், அந்தப் படம் பலத்த விமர்சனங்களுக்கும், வசூல் தோல்விக்கும் ஆளானதால் நிதி நெருக்கடிக்கு ஆழமாக தள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த நிலைமை வேறு யாருக்காவது வந்திருக்க இருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
தான் நஷ்டத்தை சந்தித்தபோதும், நடிகர் விஜய்யின் மார்க்கெட் மற்றும் சம்பள உயர்வுக்கு இந்த படம் பின்னணி அமைத்ததாகவும் பி.டி. செல்வகுமார் குறிப்பிடுகிறார். ‘புலி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்த அடுத்த படங்களுக்கு டபுள் சம்பளம் கிடைத்ததாகவும், ஆனாலும், தயாரிப்பாளராக எனக்கு எந்த வருவாயும் வரவில்லை.
எனது வாழ்க்கையே முழுமையாக சிதைந்துவிட்டது’ எனவே திடீரென பட தயாரிக்க நினைக்கும் புதிய தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
