கலைப்புலி தானோ தயாரிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் ட்ரெயின் திரைப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ரயில் பயணத்தில் நடக்கும் திகில் சம்பவங்கள் நிறைந்த கதையில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். பல வெற்றி படங்களை அளித்த வெற்றிமாறன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.