பிரபல இந்தி நடிகர் தினேஷ் பாத்னிஸ் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். சர்பரோஸ், மேலா, ஆபீஸர் உள்ளிட்ட படங்களிலும், சி.ஐ.டி. என்ற டிவியில் தொடரிலும் நடித்து பிரபலமானவர் தினேஷ் பாத்னிஸ். இந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.