நடிகர் அன்னு கபூர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியினை மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் அஜய் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர் அன்னு கபூரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மேலும் அவர் குணமடைந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.