சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நடந்த 4 மணி நேர தீவிர அறுவை சிகிச்சையில் மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை மற்றும் கேரளாவில் இருந்து வந்த இரண்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது.