நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 4 நாட்கள் கனக சபையில் ஏற பக்தர்களை அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்..

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் பெருமாள் கோவில் ஆகாய ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 18ஆம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் இந்த ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று 25ஆம் தேதி, நாளை 26 முதல் 28 வரை 4 நாட்கள் பக்தர்களை கனக சபையில் ஏற அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .அதற்கு முக்கிய காரணம், மற்ற கோவில்களில் உற்சவர் தான் தேரில் இருந்து வீதி உலா வருவார். ஆனால் இங்கு நடராஜர் கோயிலில் மட்டும் தான் மூலவரான நடராஜர் பெருமான் கனக சபையில் இருந்து தேரில் எழுந்தருளி வீதி உலா வந்துகொண்டிருக்கிறார்.

எனவே 2 நாட்கள் கனக சபையில் நடராஜர் பெருமாள் இருக்க முடியாத நிலை இருக்கும். கனக சபையில் இருந்து தேரில் எழுந்தருளிய நிகழ்வுகளான பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல நாளை தேர் திருவிழா நாளை மறுநாள் தரிசன திருவிழா, பின்னர் 2 நாட்கள் முடிந்து மீண்டும் கனக சபைக்கு நடராஜபெருமான் வந்து 28ஆம் தேதி அன்று அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்களை அனுமதித்தால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதை காரணம் காட்டி 4 நாட்கள் மரபு படி ஆரம்ப காலத்தில் இருந்து மரபின்படி 4 நாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை என தீட்சிதர்கள் தரப்பில் கூறியுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் அரசாணையின் படி பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திடசிதர்கள் தரப்பில் இந்த 4 நாட்களுக்கு நாங்கள் தடை ஆணை கேட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே 4 நாட்கள் எங்களால் எக்காரணத்தை கொண்டும் பக்தர்களை அனுமதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பக்தர்கள் வழக்கம்போல் இன்று கனக சபையில் தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்றுள்ளனர். நாளை நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடைபெறவுள்ள நிலையில் விழா பாதுகாப்பு குறித்து சிதம்பரம் சார் ஆட்சியர், ஏஎஸ்பி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.