சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பாதித்த இடங்களில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி பால் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மழை பாதித்த பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ள பாதிப்பில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பால் மற்றும் உணவுகள் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.