தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் படிவம் என சமூக வலைத்தளங்களில் பரவும் படிவம் பொய்யானது என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கட்சி சார்பில் அறிமுகம் செய்யப்படும் பிரத்தியேக செயலி மூலம் மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் செயலி மூலம் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.