தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிப்பதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது வெளிப்படுவதாகத் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (பிப். 5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
“விஜய்யை எடப்பாடி பழனிசாமி நேரடியாக விமர்சிப்பது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது. ‘பி டீமாக’ (B-Team) யார் செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். தோல்வி பயத்தின் காரணமாகவே அதிமுக தரப்பு தினமும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது” என்றார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் த.வெ.க. இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் விஜய் அதிமுகவை அடிமை ஊழல் கட்சி என்று விமர்சித்ததால் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் நடிகர் விஜய் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்‌. அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக தங்கள் கூட்டணிக்கு விஜய் வருவார் என்ற நம்பிக்கையில் முன்னதாக அவருக்கு சாதகமாக பேசி வந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் தமிழக வெற்றிக்கழகத்தை தாக்கி பேசி வருவது குறிப்பிடத்தக்கது