மும்பை வான்கடே மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த ஏமாற்றமான தோல்விக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மைதானத்திற்கு நேரில் சென்று வீரர்களைச் சந்தித்தார்.
மேலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் மூத்த வீரர் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் அவர் கைகொடுத்து ஆறுதல் கூறியதுடன், கடினமான தருணத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்றார். இந்தச் சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், உரிமையாளரே நேரடியாக வீரர்களை உற்சாகப்படுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அணியின் மன உறுதியை மீட்டெடுக்கவும், வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட வீரர்களை ஊக்கப்படுத்தவும் ஆகாஷ் அம்பானி மேற்கொண்ட இந்த முயற்சி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
