ஐபிஎல் 2026 ஃபைனலில் ஆர்சிபி அணியிடம் தோற்றுப்போன சோகத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்கு, அடுத்த சில மணி நேரங்களிலேயே மரண பயத்தைக் காட்டும் ஒரு பயங்கர விபத்து நேர்ந்துள்ளது!
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இருந்து வீரர்கள் அனைவரும் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பேருந்து புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்கசிவு (Short Circuit) காரணமாகப் பேருந்துக்குள் மளமளவென கரும்புகை பரவி, தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
பேருந்துக்குள் புகை சூழ்ந்ததும் சுதாரித்துக் கொண்ட வீரர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு அவசர அவசரமாகப் பேருந்தை விட்டு வெளியே குதித்தனர். நல்வாய்ப்பாக வீரர்கள் அனைவரும் எந்தவித காயமுமின்றி நூலிழையில் உயிர் தப்பினர்!
மாற்றுப் பேருந்து வரும் வரை நள்ளிரவில் சுமார் ஒரு மணி நேரம் நடுரோட்டிலேயே வீரர்கள் அனைவரும் தவித்து நின்ற சம்பவம், ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
