மகேந்திர சிங் தோனி விமானத்தில் கேண்டி க்ரஷ் என்ற வீடியோ கேமை விளையாடும் வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து 3மணி நேரத்திற்குள் 3.6 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்ற நிலையில், கேம் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது..

அந்த வீடியோவில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் தோனிக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதே வீடியோவில், தோனியின் இருக்கைக்கு முன்னால் கேண்டி க்ரஷ் கேம் திறந்திருக்கும் டேப்பைக் காணலாம். இதனால் தான் கேண்டி க்ரஷ் கேம் ட்ரெண்டிங்காகியுள்ளது.

வெறும் 3 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்ததாக மொபைல் கேமிங் அப்ளிகேஷன் கூறியுள்ளது. கேண்டி க்ரஷின் ட்விட்டர் பக்கமும் தோனி விளையாட்டை ட்ரெண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தது. “இப்போது – வெறும் 3 மணி நேரத்தில் 3.6 மில்லியன் புதிய பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளோம்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் @msdhoniக்கு நன்றி. உங்களால்தான் நாங்கள் இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறோம்” – இவ்வாறு கேம் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தோனி கிரிக்கெட் மற்றும் வீடியோ கேம்களின் தீவிர ரசிகர். கால் ஆஃப் டூட்டி, FIFA மற்றும் PUBG ஆகியவை அவருக்குப் பிடித்த கேம்கள்.