விமானத்தில் தோனி கேண்டி க்ரஷ் விளையாடிய நிலையில் 3 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளனர்..

மகேந்திர சிங் தோனி.. உலகுக்கு அறிமுகமே தேவையில்லாத பெயர். இந்தியாவுக்கு அனைத்து வடிவங்களிலும் ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தல தோனி. பொதுவாக தோனி தனது மொபைல் போனை சிக்கனமாகவே பயன்படுத்துவார். அவர் பெரும்பாலும் ஆன்லைன் கேம்களை மட்டுமே விளையாட விரும்புகிறார்.

சமீபத்தில், விமானத்தில் தோனிக்கு சாக்லேட் கொடுக்க சென்ற ஏர் ஹோஸ்டஸ், அவரது எதிர்வினையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில், ஏர் ஹோஸ்டஸ் கொடுத்த சாக்லேட்டை எடுத்துக் கொண்ட தோனி தனது டேப்பில் கேண்டி க்ரஷ் விளையாடுவதைக் காணலாம். இது ட்விட்டரில் வைரலானது..

இதனால் தோனி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்கள் பலரும் இந்த கேமை டவுன்லோட் செய்ய போவதாக கருத்து தெரிவித்தனர். இருப்பினும், கருத்துகளை கவனத்தில் கொண்ட தோனி ரசிகர் ஒருவர் ‘Candy Crush Saga Official’ என்ற பெயரில் ஒரு போலி கணக்கை உருவாக்கினார்..மேலும் விளையாட்டிற்கான பதிவிறக்கங்கள் மூன்றே மணி நேரத்தில் 3.6 மில்லியனாக (30 லட்சம்) அதிகரித்தன.

போலி கணக்கு செய்தி வைரலானபோது, ​​​​பல மஹி ரசிகர்கள் கேண்டி க்ரஷ் விளையாட்டை பதிவிறக்கம் செய்து அந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்கப்போவதாக கருத்து தெரிவித்தனர். மேலும் வெறும் மூன்று மணி நேரத்தில் 30 லட்சம் பேர் தங்கள் செயலியை பதிவிறக்கம் செய்ததாக மொபைல் கேமிங் அப்ளிகேஷன் கூறியுள்ளது. கேண்டி க்ரஷின் ட்விட்டர் பக்கமும் தோனி விளையாட்டை ட்ரெண்டிங்கிற்கு நன்றி தெரிவித்தது. “இப்போது – வெறும் 3 மணி நேரத்தில் 3.6 மில்லியன் புதிய பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளோம்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் @msdhoniக்கு நன்றி. உங்களால்தான் நாங்கள் இந்தியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறோம்” – இவ்வாறு கேம் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. தோனி கிரிக்கெட் மற்றும் வீடியோ கேம்களின் தீவிர ரசிகர். கால் ஆஃப் டூட்டி, FIFA மற்றும் PUBG ஆகியவை அவருக்குப் பிடித்த கேம்கள்.

https://twitter.com/Supriya404/status/1673204653536825346