ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சேப்பாக்கம் அல்லது லக்னோவா என்று யோசிக்கும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சி அணிந்து வந்து சென்னை அணிக்கு குறிப்பாக எம்எஸ் தோனிக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த போட்டியை காண்பதற்கு லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆடிவரும் தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டீ காக்கின் மனைவி வந்திருந்தார்.

இவர் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்ச் எம்.எஸ் தோனி வந்தபோது மிகவும் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளது. அவர் அணிந்திருந்த வாட்சில் அதிக சத்தம் எழுந்தால் எச்சரிக்கை ஒலி வெளிவரும். தோனி மைதானத்திற்குள் வந்த போது அந்த வாட்ச் 124 டெசிபல் ஒலியை எழுப்பியுள்ளது. தோனி மைதானத்திற்கு வந்தபோது டி காக் மனைவி அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சில் 95 டெசிபல் அளவிற்கு ஒலி மாசு இருப்பதாக எச்சரிக்கை வந்துள்ளது‌. இந்த அளவிலான ஒலியை 10 நிமிடங்கள் கேட்டால் தற்காலிகமாக காது கேட்காமல் போகவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை வந்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.