ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சுமார் 500 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த உணவை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே சிறுவர்கள் உட்பட பலர் மயங்கி விழுந்துள்ளனர்.

இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 200 பேர் அந்த உணவை சாப்பிட்ட பிறகு சிகிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.