பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இம்ரான் கான் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள கட்சியினர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இம்ரான் கானை வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.