அமெரிக்காவைச் சேர்ந்த ஹியூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதாவது நீங்கள் இளமையான நபராக இருந்து உங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால் உங்களுடைய மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது . மலத்தை ஒரு முறை வாங்க 41 ஆயிரம் தருகிறார்களாம்.

மேலும் தினசரி மலத்தை கொடுக்க தயார் என்றால் வருடத்திற்கு சுமார் ஒரு கோடியே  40 லட்சம் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் என்று தெரிவித்துள்ளது. இந்த மனித மலத்தை மலத்தை இவர்கள் முறையாக பிராசஸ் செய்து அதை வயிற்றுப் பிரச்சனை உள்ள மனிதர்களின் உடலில் செலுத்துவார்கள். இதனால் அவர்கள் குணமடைவார்கள் என்று இந்த நிறுவனம் கூறுகிறது.