சென்னையில் திமுக எம்.பி. கனிமொழியின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டலைத் தொடர்ந்து, போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் கனிமொழி இல்லம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று, ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா இல்லங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான மிரட்டல்களைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.