இஸ்ரேல் ஹமாஸ் இடையே 13 நாட்களைக் கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது இரு தரப்பினருக்கும் இடையே இந்த போரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஹமாஸ்க்கு  ஈரானும் துணை நிற்கிறது.

இந்த போருக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இஸ்ரேல் சென்று அந்நாட்டுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளார். இதில் இன்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள இருபதாக தகவல் வெளியாகியுள்ளது.