2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சிகள் தனது வரிசையை பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) நாமக்கல் மாவட்ட முன்னாள் மக்களவை உறுப்பினரும், முக்கிய தலைவருமான நதிராஜவேல், அதே மாவட்டத்தின் துணைச் செயலாளராக இருந்த ஜெயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அதிமுகவுடன் கைகோர்த்துள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தலில் இந்த சேர்க்கை அதிமுகவுக்கு வரவேற்கத்தக்க பலத்தை உருவாக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
