டெல்லியில் உள்ள ஒரு பகுதியில், 24 வயது இளம்பெண் ஒருவருக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் கொடுத்த நபர் ஒருவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, மோமோஸ் வாங்கித் தருவதாகக் கூறி அந்த நபர் தன்னை காரில் அழைத்துச் சென்றுள்ளார் வழியில் சிஎன்ஜி நிரப்ப வேண்டும் என்று பொய் கூறி, காரை ஒரு வெறிச்சோடிய தனிமையான பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளார்; அங்கு வைத்து அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதுடன், காரை விட்டு இறங்க விடாமல் தடுத்துப் பாலியல் வன்புணர்வுக்கு வற்புறுத்தியுள்ளார்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்தப் பெண், தைரியமாகத் தனது மொபைல் போனில் அந்த நபர் பேசிய அநாகரிக வார்த்தைகளையும் மிரட்டல்களையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்; “என்னைத் தொட்டால் ஓடும் காரில் இருந்து குதித்து விடுவேன்” என்று அவர் கதறியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, FIR பதிவு செய்து, அந்த நபரை டெல்லி போலீஸ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
