சீனாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான யுனிட்ரீ உருவாக்கியுள்ள மனித உருவ ரோபோ ஒன்று, மேடையில் மனிதர்களைப் போலவே நடனம் ஆடிய போது எதிர்பாராத விதமாகத் தடுமாறி விழுந்த வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் சிரிக்க வைத்துள்ளது.

வெள்ளி நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்த அந்த ரோபோ, மேடையில் திரண்டிருந்த கூட்டத்திற்கு முன்னால் அசாத்தியமான அசைவுகளுடன் மிக நேர்த்தியாகத் தனது நடனத்தைத் தொடங்கியது; ரோபோவின் பேலன்ஸ் மற்றும் கட்டுப்பாட்டைக் கண்டு அனைவரும் வியந்த வேளையில், நடனத்தின் இறுதிப் பகுதியில் எதிர்பாராத விதமாகத்தனது சமநிலையை இழந்த அந்த ரோபோ, திடீரென மேடையிலேயே அசாத்தியமாகச் சரிந்து விழுந்தது.

<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by AI researches | AI (@airesearches)

“>

“கொரியோகிராஃப் செய்யப்பட்ட சடன் டெத்” எனப் பயனர்களால் வர்ணிக்கப்படும் இந்த வீடியோ இணையத்தில் பரவி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருவதுடன், ரோபோவின் இந்த நடன தோல்வி குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.