தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசுப் பொறுப்பேற்றவுடன் முடங்கியிருந்த நிர்வாக இயந்திரத்தைத் துரிதப்படுத்த எடுக்கப்பட்ட அதிரடி இடமாற்ற நடவடிக்கைகள், அரசு அதிகாரிகளின் தொடர் ஒத்துழையாமை மற்றும் மிரட்டல் போக்கால் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றன.
கிராம வளர்ச்சி, நீர்வளம், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்திலேயே கொடி கட்டிப் பறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் அடிமட்டப் பணியாளர்கள் வரை அதிரடியாக மாற்றப்பட்டனர். ஆனால், புதிய இடங்களுக்குச் சென்று பொறுப்பேற்காமல் பல வாரங்களாக அதிகாரிகள் தாமதித்து வருவதுடன், முந்தைய ஆட்சியாளர்களின் சிபாரிசு கடிதங்களைக் காட்டி மீண்டும் பழைய இடங்களையே கைப்பற்ற முயன்று வருகின்றனர். கடந்த மாதம் 16-ம் தேதி பொதுப்பணித்துறையில் நிர்வாகக் காரணங்களுக்காக 23 மேற்பார்வைப்
டிரான்ஸ்பர் செய்யப்பட்ட அதிகாரிகள் புதிய பணியிடங்களில் சேர மறுப்பு: தவெக அரசை முடக்கும் டிரான்ஸ்பர் பஞ்சாயத்து?..
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரியணையில் அமர்ந்த பிறகு, நிர்வாக ரீதியாக பல அதிரடி மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. அதற்கு ஏற்றார்போலவே,… pic.twitter.com/ByiUtE2cCu
— தங்க.காளிப்பாண்டி (@sureshkalipandi) August 17, 2026
“>
பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். துறைச் செயலாளர் செல்வராஜ் உத்தரவிட்டும், பெரும்பாலானோர் புதிய பணியிடங்களில் சேராமல் நீண்ட மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டனர். நீர்வளத்துறையிலும் இதே நாடகமே அரங்கேறி வருவதுடன், இடமாற்ற உத்தரவுகளை ரத்து செய்ய உயர் மட்டங்களில் தீவிர அழுத்தங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அரசு விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் புதிய பணியிடத்தில் சேராத அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் உள்ளது. ஆனால், சில துறைச் செயலாளர்கள் இந்த விவகாரத்தில் காட்டும் மெத்தனமும் அலட்சியமும் திரைக்குப் பின்னால் நடக்கும் சில “ரகசிய பேரங்கள்” குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளன.
அதிகாரிகளின் இந்தத் திமிர்த்தனமான போக்கும், துறை சார்ந்த நிர்வாக மௌனமும் தவெக அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சிக்கல்களையும் நிர்வாக முடக்கத்தையும் உருவாக்கும் அபாயம் உள்ளதால், முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு துறைச் செயலாளர்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
