கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அவர் அவசரமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.