“அம்மா ஜெயலலிதாவை 21 நாள் ஜெயில்ல வச்சவங்களோடவே கூட்டணி வைக்கப் பாக்குறாங்களே அந்த சதிகாரங்க.. அவங்களுக்குத் துரோகம் அங்கேதான் இருக்கு!” என்று  செங்கோட்டையன் மாமல்லபுரம் மாற்றுக்கட்சி இணைப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி அணியினரை நோக்கி ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு விழாவில் அதிமுகவின் முன்னாள் மூத்த அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து மேடையில் பேசிய செங்கோட்டையன், அம்மாவின் ஆன்மாவுக்குத் துரோகம் செய்தவர்களை அடையாளம் காட்டி, அந்த சதியைத் தகர்த்தெறியும் சக்தியாகத்தான் இந்த முக்கிய நிர்வாகிகள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகப் பிரகடனப்படுத்தினார்.

துரோகம் தவெகவில் இல்லை, அதிமுகவை கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றி சதித் திட்டம் தீட்டுபவர்களிடம் தான் இருக்கிறது என்று அவர் பேசிய பேச்சு  அறிவாலயம் வரை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது.