“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரைக்கும்தான் அது அதிமுக, இப்ப ஈபிஎஸ் வச்சிருக்கிறது வெறும் கார்ப்பரேட் கம்பெனி!” என்று  செங்கோட்டையன் மாமல்லபுரத்தில் நடத்திய  இணைப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி அணியினரைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற தவெகவின் பிரம்மாண்ட மாற்றுக்கட்சி இணைப்பு விழாவில், அதிமுகவின் முன்னாள் மூத்த அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள், பல்வேறு மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய செங்கோட்டையன், ஈபிஎஸ்-க்கு பின்னால் வெறும் 10 பேர் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று கூறி அதிமுக கூடாரத்தை மொத்தமாக ஆட்டிப்படைத்துள்ளார்.

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள இந்த  தாவல், அதிமுக தொண்டர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.