தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ இளையராஜாவிடம் 35 கோடி வரை பேரம் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று ரமேஷ், சீனிவாசன், செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி சகோதரர் சொல்லி தான் தமிழக வெற்றி கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பியை கரூர் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் தலைமறைவானதாக கூறப்படும் நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.