தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு ஏற்படும் நோய் தொற்று பாதிப்புகளும் அதிகமாகிவிடும். அதாவது மலேரியா, டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் காய்ச்சல்களால் பல வகையான நோய்களும் மக்களை தாக்கும். இவற்றில் கொசுக்களால் ஏற்படும் நோய்கள் அதிகமாக இருந்து வரும் நிலையில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை முறையாக அகற்றி சுகாதாரமாக இருந்தால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். அதேசமயம் நோய்கள் குறித்தான அறிகுறிகள் ஏற்படும் போது வீட்டு வைத்தியத்தை மட்டும் நம்பாமல் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும்.

இதனைத் தவிர சுத்தமாக காய்ச்சி ஆற வைத்து வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும் . அதிக அளவிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் நோய் தொற்று அபாயங்கள் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். இது குறித்து அறிவுறுத்தல்களை சுகாதார துறையும் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் மக்களும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.