சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் கவிதா ராஜேந்திரன், அரசியல் வட்டாரத்தையே அதிரவைக்கும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் தவெகவில் வந்து சேருவார் எனத் தான் நம்புவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்சகட்டமாக, தவெக தலைவர் விஜய்யே நேரடியாக ஓபிஎஸ்-ஸை கட்சிக்கு அழைத்துள்ளதாகவும், ஜனவரி 1-ம் தேதியே அவர் இணைந்திருக்க வேண்டியது என்றும் கவிதா கூறியுள்ளார்.
ஆனால், சில அரசியல் நிர்ப்பந்தங்கள் மற்றும் டெல்லி மேலிட அழுத்தங்கள் காரணமாகவே இந்த இணைப்பு தள்ளிப்போயுள்ளதாகக் கூறப்படுகிறது.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என ஓபிஎஸ் அடிக்கடி கூறி வரும் நிலையில், வரும் தைப் பொங்கல் நன்னாளில் அவர் மஞ்சள் துண்டை கழற்றிவிட்டு தவெக துண்டை அணிவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் போன்ற சீனியர் தலைவர்கள் தவெகவில் இணைந்தால், அது 2026 தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
