தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளது.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த போது உள்துறை மந்திரி அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறினார். ஆனால் இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நிர்வாகிகள் மறுத்த நிலையில் அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட்டணி ஆட்சி தொடர்பாக பேசியது தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின் பாஜகவில் இருந்து 20 முதல் 30 பேர் எம்எல்ஏக்களாக வருவார்கள் என்றும் அதில் சிலர் அமைச்சர்களாக வருவார்கள் என்றும் கூறினார். மேலும் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறும் நிலையில் தற்போது நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
