நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தை விதி உடனே அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நாள்தோறும் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் விஜயின் அரசியல் குறித்து தொண்டர்கள் பரப்புரை செய்ய உள்ளனர்.