தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் மிக உயரிய பதவியான தலைமைச் செயலாளர் பதவியில் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிய ஆணையம், அவருக்குப் பதிலாக சாய் குமாரைப் புதிய தலைமைச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நடுநிலையான மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

​அதேபோல் காவல்துறை மட்டத்திலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் (Directorate of Vigilance and Anti-Corruption) புதிய டி.ஜி.பி-யாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக டிஜிபி-யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது தலைமைச் செயலாளர் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு என அடுத்தடுத்த முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.