வாக்காளர்களுக்கு நேரடியான வேண்டுகோள் விடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஏப்ரல் 23 அன்று அதிகாலையிலேயே தயாராகி வாக்குச் சாவடிக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். “அன்று காலையில் எழுந்து உங்கள் வீட்டுச் சாமியைக் கும்பிட்டுவிட்டு, ஓட்டர் ஐடியை எடுத்துக்கொண்டு போய், அந்த விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை ஒரு அழுத்து அழுத்துங்கள்” என்று மிக எளிமையாகவும் அதே சமயம் ஆணித்தரமாகவும் பேசினார்.
இந்தத் தேர்தல் என்பது வெறும் ஐந்து ஆண்டுக்கால ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்று குறிப்பிட்ட விஜய், தன் மீது நம்பிக்கை வைத்து உங்கள் வீட்டுப் பிள்ளையான தனக்கு ஒரே ஒருமுறை வாய்ப்பு வழங்குமாறு மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசினார். மக்களின் பேராதரவுடன் இந்தப் போர் வெற்றியடையும் என உறுதி கூறி அவர் உரையை நிறைவு செய்தது, அங்கிருந்த லட்சக்கணக்கான மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
