தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் குஷ்புவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. தமிழகத்தில் இந்த முறை சில இடங்களில் வெற்றிபெற பாஜக மேலிடம் விரும்புகிறது.

அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களின் தேர்வு நடப்பதாக கூறப்படும் சூழலில், குஷ்புவின் பெயரும் பரிசீலனை பட்டியலில் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.