தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வழங்கப்படும் தேசிய எம் எஸ் எம் இ விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் விருது, உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மாநில விருது, மாவட்ட விருது மற்றும் வங்கி விருது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.

இந்த விருதுகளை பெற தகுதி உடையவர்கள் https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_index.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகின்ற மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது கூடுதல் தகவல்களை அறிய 044-22501011,12,13,14 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்தது.