லண்டனில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத பதற்றம் ஏற்பட்டது. மூவர்ணக் கொடியை ஏந்தி “இந்துஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டுக் கொண்டாடிக் கொண்டிருந்த இந்தியர்கள் மீது பாகிஸ்தானியர்கள் குழு துன்புறுத்தல் செய்ய முனைந்தனர்.
குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் உட்பட பெண்கள் குழுவை குறிவைத்து, மூவர்ணக் கொடியைப் பறிக்க முயன்றனர். ஆனால், பெண்கள் அஞ்சாமல் துணிச்சலுடன் எதிர்த்து, கொடியை காக்கப் போராடினர். அவர்களின் உறுதியான நிலைப்பாடு, ஊடுருவல்காரர்களை பின்வாங்கச் செய்தது.
இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், ஒரு முஸ்லிம் பெண் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி தனது தோழிகளுடன் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தானியர்கள் மிரட்ட முயன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர் அஞ்சாமல் உறுதியுடன் பதிலடி கொடுத்து, அவர்களை வெளியேறச் செய்தார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இது தான் உண்மையான தேசபக்தி” எனக் கூறி பெண்களின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.
⚡ UK: Pakistani goons harass Indian Muslim girls on the streets of London during India’s Independence Day celebrations pic.twitter.com/QDDxArDinQ
— OSINT Updates (@OsintUpdates) August 18, 2025
“>
இதுபோன்ற இந்திய–பாகிஸ்தான் குடிமக்கள் மோதல்கள் லண்டனில் இதற்கு முன்பும் நடந்துள்ளன. புல்வாமா தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் போன்ற சம்பவங்களுக்குப் பிறகும் இதேபோன்று பதற்றங்கள் ஏற்பட்டன. இந்தியா ஆகஸ்ட் 15, பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ஆகிய தினங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதால், அந்த நாட்களில் புலம்பெயர் சமூகங்களில் உணர்ச்சிகள் அதிகரித்து மோதல்களாக மாறுவது வழக்கமாகிறது.
ஆனால், இந்த முறை இந்தியப் பெண்களின் தைரியமான செயல், தேசபக்தியின் பெருமையை உலகம் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளது.
