அமெரிக்காவின் புளோரிடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர் சிங் என்ற டிரக் ஓட்டுநர், சட்டவிரோதமாக யு-டர்ன் செய்து மினிவேன் மீது மோதியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ல் மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த இவர், ஆங்கிலப் புலமை மற்றும் சாலை விதி அறிவு தேர்வுகளில் படுதோல்வி அடைந்திருந்தார்.
அமெரிக்க கூட்டாட்சி மோட்டார் வாகன பாதுகாப்பு நிர்வாகத்தின் ஆங்கிலத் தேர்வில் 12 கேள்விகளில் 2 மட்டுமே சரியாக பதிலளித்த இவர், 4 சாலை அடையாளங்களில் ஒன்றை மட்டுமே கண்டறிந்தார். இருப்பினும், கலிபோர்னியா மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் இவருக்கு வணிக ஓட்டுநர் உரிமம் (சிடிஎல்) வழங்கப்பட்டது. இந்த பயங்கர விபத்து, “தவறான முடிவுகளும், மோசமான தோல்விகளும் ஏற்படுத்திய தவிர்க்கப்பட வேண்டிய பேரழிவு” என போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி குற்றம்சாட்டினார்.
NEW: The illegal immigrant who is accused of taking 3 American lives while making an illegal U-turn was only able to accurately identify 1 of 4 highway traffic signs during an FMCSA interview.
Harjinder Singh failed an assessment conducted by the Federal Motor Carrier Safety… pic.twitter.com/IfyylNddpl
— Collin Rugg (@CollinRugg) August 19, 2025
இந்த விபத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமிற்கும் இடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளது. கலிபோர்னியாவின் ‘புலம்பெயர்ந்தோருக்கு அடைக்கலம்’ கொள்கைகளால், சட்டவிரோதமாக நாட்டில் இருந்த ஹர்ஜிந்தருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டதாகவும், இது அமெரிக்க மக்களின் பாதுகாப்பை பறித்ததாகவும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) குற்றம்சாட்டியது.
இதற்கு பதிலடியாக, நியூசமின் அலுவலகம், ஹர்ஜிந்தர் 2018-ல் டிரம்ப் ஆட்சியின்போது நாட்டிற்குள் நுழைந்ததாகவும், 2019-ல் ஆளுநராக பொறுப்பேற்றதாகவும் வாதிட்டது. இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு பயந்து, $5,000 பிணையில் விடுவிக்கப்பட்ட இவர், புலம்பெயர்ந்தோர் விவகார நடைமுறைகளில் இருந்து வந்தார்.
“கவின் நியூசம் பொதுமக்கள் பாதுகாப்பை புறக்கணித்து, சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உரிமம் வழங்குவது பாதுகாப்பை மேம்படுத்துகிறது என வெட்கமின்றி கூறுகிறார்,” என வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்தது. ஆகஸ்ட் 16, 2025-ல் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட ஹர்ஜிந்தர், மூன்று வாகனக் கொலை குற்றச்சாட்டுகளையும், நாடு கடத்தப்படுவதையும் எதிர்கொள்கிறார்.
