இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் தினம்தோறும் ஏகப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நாற்காலியில் அமர்ந்துகொண்டு உலகப் புகழ்பெற்ற பிரபலங்களையே வம்புக்கு இழுத்து ரீல்ஸ் வீடியோக்களில் ரீல் ஓட்டி வரும் ‘சுனிதா மேம்’ என்ற பெண்ணின் கற்பனை கதைகள் ஒட்டுமொத்த இணையவாசிகளையும்  சிரிப்பலையில் ஆழ்த்திப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சுனிதா மேம் தனது வீடியோக்களில் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் எலான் மஸ்க் போன்ற டாப் விஐபிக்கள் தனக்குத் தொடர்ந்து போன் செய்வதாகக் கூறி அதிரடி கிளப்பி வருகிறார். தனது ஒரு வீடியோவில், ரொனால்டோ தனக்குத் தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்ததாகவும், தன்னிடம் அவர் ‘டெஸ்லா’ கார் கேட்டதால் அவரை நன்றாகத் திட்டிவிட்டு காரை எடுத்துக்கொள்ள அனுமதி கொடுத்ததாகவும் மிகத் தைரியமாகக் கூறியுள்ளார்;

 

View this post on Instagram

 

A post shared by Vijay Raj Lakshmi (@vijayrajlakshmiofficial)

அதிலும் உச்சக்கட்ட காமெடியாக ரொனால்டோ ஒரு ‘கிரிக்கெட் வீரர்’ என்று அவர் கூற, அதைக்கேட்டு நெட்டிசன்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். மற்றொரு கதையில், மில்லினியர் பில் கேட்ஸ் தனக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூப்பிட்டதாகவும், தான் வீட்டிலிருந்தே ஏகப்பட்ட வேலைகளைச் செய்வதால் அந்த வேலை தனக்குத் தேவையில்லை என மறுத்துவிட்டதாகவும், எலான் மஸ்க் தன்னை விண்வெளிக்கு அழைத்தபோது வீட்டிலிருந்தே சந்திரன், நட்சத்திரங்களைப் பார்த்துக் கொள்வேன் என எடக்குமடக்காகப் பேசியுள்ளார்.

அசல் உண்மையைச் சொல்வது போன்ற அவரது முக பாவனைகளும், அதீத தன்னம்பிக்கையுடன் அவர் பேசும் இந்த ‘மகா பந்தா’ கதைகளும் முற்றிலும் பொய் என்று தெரிந்தாலும், அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்து விடுபட நெட்டிசன்கள் இந்த வீடியோக்களைத் தங்களது நண்பர்களுக்குப் பகிர்ந்து “இவரை அடுத்த பிரதமராக்கிடுங்க!” என்று கமெண்ட் பாக்ஸில் கலாய்த்து வைரலாக்கி வருகின்றனர்.