தேசிய அளவிலான கபடியாட்ட வீராங்கனை கிரண் சூரஜ் தாடே  வேலை வாங்கித் தருவதாக திருமணத்திற்கு முன்பு உறுதியளித்த தனது கணவர் சொப்னில் ஜெய்தேவ் லம்ப்காரே  ஏமாற்றியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020-ஆம் ஆண்டு திருமணமான கிரண், வேலை குறித்து கணவர் அளித்த உறுதிமொழிகள் அனைத்தும் பொய் எனத் தெரியவந்ததால், கணவரின் மனரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் ‘பாலியல் சலுகைகள்’ கோரியதால் விரக்தியடைந்து பெற்றோர் வீட்டிற்குத் திரும்பினார். தொடர்ந்து மிரட்டல் வந்ததால், விவாகரத்து கோரி வழக்குத் தொடர குடும்பத்தினர் வற்புறுத்திய நிலையில், டிசம்பர் 4 அன்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கிரண், மூன்று நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தற்கொலைக்குத் தூண்டியதாகக் கணவர் சொப்னில் மீது  காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.