தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே இன்று (நவ. 24) இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ (X) தளப் பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோர் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும்…
— TVK Vijay (@TVKVijayHQ) November 24, 2025
“>
