சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக நிச்சயம் முத்திரை பதிக்கும் என்றும், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், கூட்டணி குறித்த அறிவிப்பைத் தற்சமயம் வெளியிட முடியாது என்றும், உரிய நேரத்தில் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். அத்துடன், மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு கூடுதல் ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
