தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடியே வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த பெருமழை வெள்ளத்தால் மக்கள் பலரும் வீடுகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதனிடையே தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நிவாரண பணிகளை கண்காணிக்க டி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுத்தொண்ட நல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படிக்கு தரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேல மங்கலகுறிச்சி, கீழமங்கல குறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரி காடுக்கு ஆல் பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில் நிவாரண பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி பேரூராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் நிவாரண பணிகளை கண்காணிக்க தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் நிவாரண பணிகளை ஐஏஎஸ் சிவராசு கண்காணிப்பார்.
வரதநாஜபுரம் சிவராமங்கலம் அப்பன் திருப்பதி குலசேகரநத்தம் சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடுவிலும் நிவாரண பணிகளை கண்காணிக்க கிரண் குராலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6 பேரும் நிவாரண முகாம்களின் வசதிகள், பாதுகாப்பான குடிநீர், உணவு விநியோகம், மருத்துவ முகாம் குறித்த பணிகளை கவனிப்பார்கள். துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கை, மின்வினியோகம், சாலைகளை சீரமைக்கும் பணிகளை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.