தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில் வாஞ்சி மணியாச்சி – நாகர்கோயில் இரட்டை ரயில் பாதை சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரூ4,586 கோடி மதிப்பிலான 4 சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடியில் ரூபாய் 124.32 கோடியில் 5 எம்.எல்.டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். திருச்செந்தூர் அருகேவுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் கனிமொழி எம்பி, அமைச்சர் ஏ.வ வேலு உள்ளிட்டோர்  பங்கேற்றனர். மேலும் வ உ சி துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக செங்கோல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முதலில் தேசிய கீதமும் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது.