துலாம் ராசி அன்பர்கள்

இன்று புதுப்புது யோசனைகள் மனதிற்குள் தோன்றும் காரியங்கள் கூட கண்டிப்பாக சூடு பிடிக்க துவங்கும்.  வரவேண்டிய பணம் நல்ல முறையில் வரும்.  எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் . உணர்ச்சிவசப்படாமல் எதையும் நீங்கள் அணுக வேண்டும்.  எல்லோரிடத்திலும் நல்ல பெயரை கண்டிப்பாக எடுக்க முடியும்.  பேச்சை குறைத்துக் கொண்டு பணியில் ஈடுபடுங்கள் . அது ரொம்ப முக்கியம். ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்

இன்று .யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுங்கள். முயற்சியால் முன்னேறுவீர்கள். இனிமையான மற்றும் சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களை சாதித்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே இறுக்கமான மனப்போக்கு காணப்படும்.  வீன் கவலைகள் எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் கண்டிப்பாக சரியாகும். திட்டமிட்டதை விட வேகமாக முன்னேறுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் வரக்கூடும்.

இன்று சில முக்கிய முடிவுகளை எதிர்காலம் கருதி எடுப்பீர்கள்.  பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும் . வீண் விரய செலவுகளை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அவசரப்பட வேண்டாம்.  சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.  எதை நினைத்தும் குழப்பம் அடைய வேண்டாம் . அதேபோன்று எந்த செயலிலும் அவசரப்பட வேண்டாம்.இன்று மாணவர்கள் வெற்றியை பெறுவீர்கள்.  கல்வி மீது அக்கறை அதிகரிக்கும் . படித்து முன்னேற வேண்டும். என்ற எண்ணம் மேலோங்கும்.  புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக படைத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை  :  தெற்கு

அதிஷ்ட எண்  ;  மூன்று ஐந்து மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்   :  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்