துலாம் ராசி அன்பர்களே,

இன்று பன்முகத் திறமையுடன் வேலைகளை செய்து முடிக்க முடியும். அரசு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். இயல்புடன் பழகுவீர்கள். நண்பர்களின் கருத்துக்களை விமர்சிக்க வேண்டாம். பணியாளர்கள் வெளியூர் செல்லக்கூடும். கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். வாக்கு வன்மையால் காரியங்களில் வெற்றி ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.

முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். திடீர் அதிர்ஷ்டம் மகிழ்ச்சியை கொடுக்கும். திட்டம் தீட்டி வெற்றி பெற முடியும். கோரிக்கைகள் நிறைவேறும். பெண்களுக்கு திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் எடுத்த காரியங்களிலும் வெற்றி உண்டு.

அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். இன்று மாணவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதுப்புது விஷயங்களில் ஈடுபடுவீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மற்றும் நான்கு
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்