கன்னி ராசி அன்பர்களே,

இன்று வரவு செலவு கணக்குகளை சரிவர பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கவனமாக கையாளுங்கள். தாயின் அன்பு உங்களுக்கு பலமாக அமையும். சிறு செயல்களையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால். அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். திருமண முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். சிலர் வீட்டுமனை வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம் நேர்மையை கடைப்பிடிப்பீர்கள். உற்சாகமாக பணிகளில் ஈடுபடுவீர்கள். சுகபோக வாழ்க்கை அமையும். இஷ்டப்பட்டதை வாங்கி மகிழ்வீர்கள்.

இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள் கல்வி மீது அக்கறை கொள்வீர்கள். இலட்சிய நோக்குடன் கல்வியை அமைத்துக் கொள்வீர்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு ஏழு மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்