அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை இறக்க அனுமதி கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிபர் அநுர குமார திசநாயக்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

“நாங்கள் போரை ஆதரிக்கவில்லை, இலங்கையை இந்தப் போருக்குள் இழுக்க விடமாட்டோம்; எங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளும் சமமானவை” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையின் இந்த அதிரடி முடிவால், ஈரானைத் தாக்கத் திட்டமிட்டிருந்த அமெரிக்காவிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்குத் தங்கள் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்த நிலையில், தற்போது இலங்கையும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் ‘டெனா’  போர்க்கப்பலில் இருந்த மாலுமிகளின் உடல்களை மீட்டெடுத்து ஈரானுக்கு அனுப்பியதன் மூலம் இலங்கை தனது மனிதாபிமான உதவியை வெளிப்படுத்தியது.

தற்போது அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தடை விதித்ததன் மூலம், ஈரான் மீதான ஒரு பெரிய தாக்குதலை இலங்கை தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.